என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமத்துவபுரம் வீடுகள்"

    • அருப்புக்ேகாட்டை அருகே உள்ள சமத்துவபுரத்தில் 21 வீடுகளுக்கு பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அருணாச்சலபுரம் கிராம ஊராட்சி, சின்ன செட்டிகுறிச்சி உட்கடை கிராமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இவற்றில் 79 வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருந்து வருகின்றனர்.

    மீதமுள்ள 21 வீடுகளுக்கு பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் தற்போது 21 வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    அதன்படி எஸ்.சி./எஸ்.டி. பிரிவில் 2 பயனாளிகளும், எம்.பி.சி. பிரிவில் 6 பயனாளிகளும், பி.சி. பிரிவில் 3 பயனாளிகளும் மற்றும் ஓ.சி. பிரிவில் 10 பயனாளிகளும் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர்.

    சின்னசெட்டிகுறிச்சி உட்கடை கிராமத்திற்கு 3 கி.மீ. சுற்றளவில் வசித்து வரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடற்ற தகுதியான பயனாளிகள் அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விருப்ப மனுவினை தேவையான ஆவணங்களுடன் வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×