search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்ட பணி ஆய்வு"

    • தொடர்ந்து கண்காணிக்க கலெக்டர் அறிவுரை
    • அலுவலக பதிவேடுகள் சோதனை செய்யப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு நடைபெற்று வரும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறதா என்பது குறித்து கலெக்டர் அமர் குஷ்வாஹா அவ்வப்போது கண்காணிக்க துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    தன் அடிப்படையில் ஒன்றியத்திற்குட்பட்ட கேத்தாண்டப்பட்டி கூத்தாண்ட குப்பம் சின்ன மோட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் திட்ட இயக்குனர் கு.செல்வராசு நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கேத்தாண்டப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் ஆவாஸ் பிளஸ், மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டப்பணிகள், பள்ளி கட்டிடங்கள், பால் சொசைட்டி கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன் (வ.ஊ), முருகேசன் (கி.ஊ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, கேத்தாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே. எம். திருப்பதி, கூத்தாண்ட குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சுரேஷ், ஊராட்சி செயலாளர்கள் மேகநாதன், செல்வகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் என பலர் உடன் இருந்தனர்.

    ×