search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரு பிறந்தநாள்"

    • ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை
    • சத்தியமூர்த்தி பவனில் நேருவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை. நீதிமன்றம் விடுவித்துள்ளது.

    கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழர்கள் என்றால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ தமிழர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லலாமா?

    கோவை குண்டுவெடிப்பில் கைதான இஸ்லாமியர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள்.

    எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகளை கொண்டாடக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் ஒரே கருத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம்.

    மதசார்பின்மை என்பதில் நாங்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சத்தியமூர்த்தி பவனிலும் நேருவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், டெல்லிபாபு, சிவராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • ஜவஹர்லால் நேருவின் மகத்தான பங்களிப்பு இல்லாமல் 21வது இந்தியாவை நினைத்துப் பார்க்க முடியாது.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில், " நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் நேரு. அவரது மகத்தான பங்களிப்பு இல்லாமல் 21வது இந்தியாவை நினைத்துப் பார்க்க முடியாது.

    ஜனநாயகத்தின் வெற்றியாளர். அவரது முற்போக்கு எண்ணங்கள் சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. உண்மையான தேசபக்தருக்கு எனது பணிவான மரியாதை" என்றார்.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான 14-11-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் கீழ்க்காணும் தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் ) வருமாறு :- குழந்தைகள் தின விழா , ரோசாவின் ராசா ,ஜவகர்லால் நேருவின் தியாகங்கள் , நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு,இளைஞரின் வழிகாட்டி நேரு

    கல்லூரி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் வருமாறு :- இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு ,,நேரு கட்டமைத்த இந்தியா ,காந்தியும் நேருவும்*ந,ருவின் பஞ்சசீலக் கொள்கை ,உலக அமைதிக்கு நேருவின் தொண்டு , அமைதிப்புறா - நேரு.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    ×