search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதிலமடைந்து கிடக்கும் பாம்பாறு அணை பூங்கா"

    • ஆரம்ப காலத்தில் இந்த பூங்காவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
    • பூங்காவை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட மேடைகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் விதமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த பூங்காவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

    ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளிகளில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பார்ப்பதற்கு வாரம் அல்லது மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச்சென்று இந்த பூங்காவுக்கு வந்து பேசி மகிழ்ந்து விட்டு சென்றனர், ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பள்ளி விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளுடன் வந்து பாம்பாறு அணையை சுற்றிபார்க்கவும், பூங்காவில் அமர்ந்து உணவருந்தவும், பேசவும் மரங்களை சுற்றி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அமரும் திண்ணை இருந்தது. குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு பொம்மைகள், ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் இருந்தன. நிழல் தரும் மரங்கள், கண்கவரும் மலர்கள் கொண்ட செடிகள் இருந்தன. ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பாறு அணை பகுதியில் பூங்கா இருப்பதால் மக்களை கவரும் விதமாக பல்வேறு அம்சங்களோடு பூங்கா இருந்தது. பூங்காவிற்கு வரும் பொது மக்களிடம் பராமரிப்பு கட்டணமும், வாகனங்களுக்கு பாதுகாப்பு கட்டணங்களும் வசூலிக்கப்பட்டன.

    ஆனால் தற்போது பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது, பூங்காவில் உள்ள விளையாட்டு திடல் உபகரணங்கள் சிதிலமடைந்து கிடக்கிறது. பூச்செடிகள், மரங்கள் போதிய பராமரிப்பின்றி காய்ந்து கிடக்கிறது. பாம்பாறு அணையில் போதிய தண்ணீர் இருந்தும் மரங்கள் காய்ந்து கருகி வருகிறது. பூங்காவை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட மேடைகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனித்து பாம்பாறு அணை பகுதியில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொது

    மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×