என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா"
- கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
- எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, விழா பேருரையாற்றுகிறார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சூளகிரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா சூளகிரி பஸ் நிலையத்தில் நடைபெறும் .
நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்ப னப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.
விழாவில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, விழா பேருரையாற்றுகிறார்.
இதையொட்டி ஓசூர் மாநகர தெற்கு பகுதி சார்பில், பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் தலைமையில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், சூளகிரி வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஓசூர் தெற்கு பகுதி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு கூட்ட நிகழ்ச்சி குறித்த நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், அச்செட்டிப்பள்ளி கூட்டுறவு சங்க தலைவர் கே.சாக்கப்பா, கிருஷ்ணன் மற்றும் தெற்கு பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.