search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலையை தேடும் போலீசார்"

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
    • போலீசார் தற்போது தலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக தற்போது இந்த ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    இந்த ஏரியில் நேற்று மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்த அந்த உடலை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பாகலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த உடலை மீட்டனர். அப்போது அந்த உடலில் இருந்து தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், கை மற்றும் கால்களில் ஆங்காங்கே வெட்டு காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த உடலை ஓசூர்

    அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக

    ஆய்வு செய்தனர். அப்பகுதியில் கொலை நடந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.

    இதனால் வேறு எங்கோ கொலை செய்து உடலை இந்த ஏரியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற னர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைத்தால் தான் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்கள் தெரியவரும்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் தற்போது தலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பாகலூர் பகுதியில் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×