என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.8 ஆயிரத்தை கடந்தது"
- ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது.
- மழை காலமாக உள்ளதாலும், தேவை அதிகரிப்பாலும், பிற மாநில வியாபாரிகள் வரத்து அதிகரித்து ள்ளதாலும் மஞ்சள் விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.
கடந்த பல நாட்களாக குவிண்டால் மஞ்சள் சராசரியாக 7,500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் கடந்த சில நாட்களாக 8,000 ரூபாயை கடந்து விற்பனையானது.
நேற்று பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் 5,799 ரூபாய் முதல் 8,129 ரூபாய்க்கும், கிழங்கு 5,280 முதல் 6,839 ரூபாய்க்கும் விற்பனை யானது. இதேபோல் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி 5,729 முதல் 8,259 ரூபாய் வரையிலும், கிழங்கு 5,369 முதல் 6,802 ரூபா ய்க்கும் விற்பனையானது.
ஈரோடு சொசைட்டியில் விரலி 5,739 முதல் 8,210 ரூபாய்க்கும், கிழங்கு 5,399 முதல் 6,959 ரூபாய் வரையிலும், கோபி சொசைட்டியில் விரலி 6,083 முதல் 6,899 ரூபாய்க்கும், கிழங்கு 6,274 முதல் 6,375 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
மழை காலமாக உள்ளதாலும், தேவை அதிகரிப்பாலும், பிற மாநில வியாபாரிகள் வரத்து அதிகரித்து ள்ளதாலும் மஞ்சள் விலை உயர்ந்துள்ளது.
தரமான மஞ்சளுக்கு 8,000 ரூபாய் கடந்து விலை கிடைப்பதால் இருப்பு வைத்துள்ள விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வரும் நாட்களில் இதே போன்ற விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.