search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள் பாதிப்பு"

    • மனுக்களை கொடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
    • அத்தியாவசிய பணிகளும் முடங்கும் சூழல் நிலவி வருகிறது

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதி க்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சி செயல்பட்டு வருகிறது. புதுப்பா ளையம் பேரூராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் சுமார் 5 ஆயரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக புதுப்பாளையம் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் இல்லாததால் போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

    புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து கூறவும் கோரிக்கை மனுக்களை செயல் அலுவ லரிடம் நேரில் கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் குடிநீர், கழிவு நீர் கால்வாய் தொடர்பான புகார்கள் கொசு மருந்து அடிக்காததால் கொசு மருந்து கொசு தொல்லை அதிகரித்துள்ளது. பல்வேறு குறைகளை செயல் அலுவலரிடம் தெரிவிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களை செயல்படுத்துவதில் சுணக்கம், பேரூராட்சி சார்பில் செயல்படுத்தபடும் அத்தியாவசிய பணிகளும் முடங்கும் சூழல் நிலவி வருகிறது.

    வாரத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் செயல் அலுவலர் பேரூராட்சிக்கு வந்து சென்று விடுவதால் பொதுமக்கள் செயல் அலுவலரை நேரில் சந்திக்க முடியவில்லை.

    எனவே புதுப்பாளையம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலரை நியமித்து பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியிலுள்ள பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேங்காய் உற்பத்தி ஆலைகள் மற்றும் பருப்பு உடைப்பு களங்களில் பணிகள் மந்த நிலையை அடைந்துள்ளது.
    • 800 தேங்காய் பருப்பு உடைக்கும் களங்களில் 100 களங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன‌.

     காங்கயம்:

    தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் காங்கயம் பிரதான இடத்ைத பிடித்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் வடமாநிலங்களில் கோலோச்சுகிறது. குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக வர்த்தகம் நடக்கிறது. அந்த அளவுக்கு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. குறிப்பாக காங்கயம், வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 180 தேங்காய் எண்ணெய் ஆலைகளும், 800-க்கும் மேற்பட்ட தேங்காய் பருப்பு உடைக்கும் உலர் களங்களும் உள்ளன.

    தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் வெயில் தாக்கம் குறைவாகவும், காற்றில் ஈரப்பதம் நிறைந்துள்ளது. இதனால் தேங்காய் உற்பத்தி ஆலைகள் மற்றும் பருப்பு உடைப்பு களங்களில் பணிகள் மந்த நிலையை அடைந்துள்ளது. 800 தேங்காய் பருப்பு உடைக்கும் களங்களில் 100 களங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில தினங்களாக காங்கயத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக இந்த பகுதியில் தேங்காய் பருப்பு உடைக்கப்பட்டு வெயிலில் காயவைத்த நிலையில் தற்போது மழைநீரில் நனையாமலிருக்க பிளாஸ்டிக் மற்றும் தார்ப்பாய் கவர்களால் மூடப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன.
    • தேங்காய் எண்ணெய்உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்புவரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை அமைத்துள்ளனர்.

    தேங்காய் எண்ணெய்உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்புவரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர் மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.இந்தநிலையில் காங்கயம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழை மற்றும் கன மழையால் தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப்பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாயால் கொண்டு மூடி வைத்துள்ளனர்.

    • மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜா உள்பட வட்டாரச் செயலாளா்கள், கல்வி மாவட்டப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
    • வாரத்தில் 7 நாட்களும் பணி செய்து வருவதால் கடும் மன உளைச்சலில் பணி செய்ய வேண்டியது இருக்கின்றது.

     திருப்பூர்:

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது.மாவட்டச்செயலாளா் பிரபு செபாஸ்டியன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பா.ஜெயலட்சுமி வரவு - செலவு அறிக்கை வாசித்தாா். இதில், மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜா உள்பட வட்டாரச் செயலாளா்கள், கல்வி மாவட்டப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    கல்வித் துறையில் வட்டார மற்றும் மாவட்ட அலுவலா்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், மண்டல ஆய்வுக் கூட்ட குழுக்களின் ஆய்வுகள், மாநில இயக்குநா்கள் ஆய்வு, ஒரே நாளில் வட்டாரத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் குழு ஆய்வு, மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு, வருடாந்திர பள்ளி ஆண்டாய்வு, பள்ளிக் கல்வி அமைச்சா் தலைமையில் குழு ஆய்வு, பள்ளிக் கல்வி துணை மற்றும் இணை இயக்குநா்கள் ஆய்வு, பள்ளிக் கல்வி ஆணையா் ஆய்வு என மாறி மாறி தொடா்ந்து குழு ஆய்வுகள் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன.

    ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆய்வுகள் நடைபெறும்போது, ஒவ்வொரு ஆய்வாளரும், ஒவ்வொரு ஆய்வுக்குழுவும் பலவிதமான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கூறி வருவதால், இயல்பான கற்றல் கற்பித்தல் பணிகளும், பள்ளி நடைமுறைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன.கடந்த 3 மாதங்களாக வாக்குச்சாவடி அலுவலராக (பிஎல்ஓ) பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஓய்வு இல்லை.வாரத்தில் 7 நாட்களும் பணி செய்து வருவதால் கடும் மன உளைச்சலில் பணி செய்ய வேண்டியது இருக்கின்றது.

    இது போன்ற கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியா்களின் குடும்பமும், உடல் நலமும், கற்றல் கற்பித்தலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. கற்பித்தல் பணி சிறக்க பி.எல்.ஓ பணியில் இருந்து ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது.
    • ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா்.

    காங்கயம்:

    காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலா்த்தும் உலா்களங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்துப் பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெறும்.

    இந்நிலையில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வருகிறது. இதனால், தேங்காய் உடைத்து உலா்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உடைக்கப்பட்டு களங்களில் உலா்த்தப்பட்டு வரும் தேங்காய்ப் பருப்புகளை தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா். இதனால் தேங்காய் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ×