search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேகம் விழா"

    • திருமுறைகளில் ஆராதனை செய்து நேற்று மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
    • பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சி எச்சம்பட்டி, ஓடையாண்டஅள்ளி, போடம்பட்டி, குரும்பட்டி, ஏரிசின்ன கானம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு மையப்பகுதியில் ஓபிளி மண்டில் அமைந்துள்ள மண்டு மாரியம்மன் கோவில் புதியதாக புணரமைக்கபட்டு அக விதிகளின்படி திருக்கோவில் நூதன பிம்ப நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வேத ஆகம சாஸ்திர புராணப்படி திருமுறைகளில் ஆராதனை செய்து நேற்று மஹா கும்பாபிஷேகம்

    மிக சிறப்பாக நடைப்பெற்றது.

    முன்னதாக நேற்று முன்தினம் ஐந்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஓபுளி கவுண்டர் சுரேஷ், ஊர்கவுண்டர்கள் எச்சம்பட்டி பொன்னுசாமி, ஒடையாண்டஅள்ளி சுந்தரேசன், போடம்பட்டி பொன்னப்பன், குரும்பட்டி முனியப்பன், ஏரி சின்னகானம்பட்டி ஜெயராமன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ஒரு மண்டலத்துக்கு தினமும் காலை, மாலை இரு வேளையும் சிறப்பு பூஜை நடைபெறும். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • பெருமாள் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
    • இதில் ஊர் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் பெருமாள் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    இதில் ஊர் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்விழா வானது அனைவரின் வேண்டுதலின் பேரில் காணிக்கைகள் செலுத்தி கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

    மேலும் இக்கோவிலுக்கு வந்த அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் கவுண்டர் (பெரிய மாணிக்கம், சின்ன மாணிக்கம், ராகவன், சின்னகுட்டி, திருவூர், முருகன், முனிராஜ், திருப்பதி, கோவில் பூசாரி, பெரிய பாண்டியன்) ஆகியோர் செய்து உள்ளனர்.

    ×