search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதான 3 பேர்"

    • முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதி யில் குட்கா மறறும் போதை பொருட்கள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் புளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் முட்டைக்கோஸ் மூட்டை க்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும் அதை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த போதை பொருட்கள் மற்றும் அதை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த முபீஸ் (20), தாளவாடி பயஸ் பாஷா (30), சத்திய மங்கலம் சஞ்சய் ராஜ் (30) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா உள்ளிட்ட புகை யிலை போதை பொரு ட்களை கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருட்களின் மதிப்பு 2.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரி வித்தனர்.

    இதையடுத்து போதை பொருட்களை கடத்தி வந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீ சார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

     டி.என்.பாளையம்:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த காசிபாளையம் மணியகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜெகதீஸ் (28) டி.ஜி.புதூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதே போன்று டி.என்.பாளையம் குமரன் கோவில் ரோட்டை சேர்ந்த சதீஸ் (46). டி.என்.பாளையத்தில் வைத்துள்ள போட்டோ ஸ்டுடியோ கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கேமரா, கம்ப்யூட்டர் மானி ட்டர் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அணை அருகே சதுமுகை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்திய போது அவர்கள் தப்பியோட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததும்,  அவர்கள் சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுவன் கோவை மாவட்டம் சிறுமுகை வடபகதூரை சேர்ந்த நித்தீஸ் (21), கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பாசரை புதுக்காலனியை சேர்ந்த விஜய் (23) என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோபி நீதிமன்றத்திலும், 17 வயது சிறுவன் கோவை சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கதிர்வேலை திருவாச்சி கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார்.
    • இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் ரோடு, திருவேங்கடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி சாந்தா (வயது 54). கணவனை இழந்த இவர் தனது மகள் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் இரவு பெருந்துறை வார சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையின் முன் படுத்துக்கொள்வார். கடந்த வாரம் சாந்தா வாரச்சந்தை பகுதியில் உள்ள கடையின் அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். கொலையாளியை பிடிப்பதற்காக பெருந்துறை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்து றையை அடுத்துள்ள திருவாச்சி கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு வாலிபர் வார சந்தை பகுதியில் ஒரு பெண்ணை கொலை செய்ததாக சரணடைந்தார்.

    கிராம நிர்வாக அலுவலர் அவரை விசாரித்த போது அவர் திருவாச்சி ஊராட்சி, பூவம்பாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 47) என்பதும், கடந்த வாரம் பெருந்துறை வாரச்சந்தை பகுதியில் கொலை செய்யப்பட்ட சாந்தாவுக்கும் இவருக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து விசாரி க்ைகயில் சம்பவத்தன்று இரவு சாந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் அருகில் இருந்த தனது நண்பர்களான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடியை சேர்ந்த கோபி என்கிற பாலமுருகன் (33), மற்றும் பெருந்துறை பவானி ரோடு, கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (33) ஆகியோர் உதவியுடன் சாந்தாவின் முகத்தில் மற்றும் தலையில் கட்டை யால் பலமாக தாக்கிய தாகவும், ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் இறந்த சாந்தாவை கீழே இழுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்று விட்டோம்.

    இந்த நிலையில் எங்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருவதை தெரிந்து தற்பொழுது நான் உங்களிடம் சரண் அடைந்ததாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து கதிர்வேலை திருவாச்சி கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார். பெருந்துறை போலீசார் கதிர்வேலுவிடம் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவருடன் கொலை செய்ய உதவியாக இருந்த கோபி என்கிற பால முருகன், ஆறுமுகம் ஆகியோரை பெருந்துறை காஞ்சிகோவில் ரோடு, கருமாண்டிசெல்லி பாளையம் பகுதியில் உள்ள சித்தம்பட்டி குளம் அருகே சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தனி ப்படை அமைத்து சோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ராசாம் பாளையம் ராட்டை சுற்றி பாளையத்தை சேர்ந்த பாலா (வயது 29) மற்றும் அவரது நண்பர் ஈரோடு வி. வி. சி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (22) ஆகியோரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா மூட்டையை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அவற்றை சிறு பொட்டலங்களாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் பாலா, அஜித் குமார், ஈரோடு அக்ரகார வீதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறை வான கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    ×