search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக வெற்றி"

    • மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
    • தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

    இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கை பாஜகவின் மீது உள்ளது.

    இந்த அனைத்து மாநிலங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் நமது இளம் வாக்காளர்கள், பாஜக மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்கள் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

    இத்தருணத்தில், உழைக்கும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் அனைவரும் ஒரு அற்புதமான முன்மாதிரியை அமைத்துள்ளீர்கள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். நாம் நிறுத்தவோ சோர்வடையவோ வேண்டியதில்லை. இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இன்று நாம் இணைந்து இந்த திசையில் ஒரு வலுவான அடியை எடுத்து வைத்துள்ளோம்.

    தெலுங்கானாவின் என் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே, பாஜக மீது உங்கள் ஆதரவுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும்.

    தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். ஒவ்வொரு பாஜக நிர்வாகியின் தீவிர முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • குஜராத்தில் பாஜக 8 முறை அல்ல, 80வது ஜெயித்தாலும் அது கேவலம்.
    • ஆளுநர் என்பவர் ஆறாவது விரலை போன்றவர்.

    அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    வாக்குக்காக மட்டுமே அம்பேத்கரை பற்றி பாஜக பேசி வருகிறது. அம்பேத்கர் இன்னைக்குத்தான் அவர்களது கண்ணுக்கு தெரிகிறார். வல்லபாய் படேலுக்கு ஏன் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைச்சாங்க. நாட்டின் பெருமை காந்தியா, அம்பேத்கரா, வல்லபாய் படேலா? இந்தியாவை தாண்டி மலேசியா, சிங்கபூர் நாடுகளில் கூட வல்லபாய் படேலை தெரியாது.

    என்.எல்.சியில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காததை கண்டித்து மிக விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். உழைப்பில் இருந்து நுட்பமாக தமிழர்களை வெளியேற்றி விட்டனர். அப்போது அந்த உழைப்புக்கு வட இந்தியர்கள் வருகிறார்கள். கிராமங்களில் வட இந்தியர்கள் நாத்து நடுகிறார்கள். கரும்பு வெட்டுகிறார்கள்.

    எல்லா இடத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து விட்டால் இந்த நிலத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் வட மாநிலத்தவர்களே தீர்மானிப்பார்கள். அப்போது நாங்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமையாவோம். இலங்கையில் நடந்துதான் இங்கும் நடக்கும். அதற்குள் தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் களம் இறக்கப்படுவார்கள். குஜராத் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஒரே ஆள் மொத்த வாக்கையும் பதிவு செய்கிறார். இது குறித்த காணொலி உள்ளது. இதை வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா, இப்படி வெற்றி பெறுவதற்கு பதில் விஷம் குடித்து சாகலாம். அவர்கள் (பாஜக) 8 முறை அல்ல 80 வது முறை ஜெயித்தாலும் அது கேவலம்.

    கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது ஆளுநர் என்பவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாது. அப்போது ஆளுநர் சட்டசபையில் மட்டும் பேசி விட்டு போவார். தற்போது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர். தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பீகார்,தெலுங்கானா இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி.
    • மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    மகாராஷ்டிரா, பீகார், அரியானா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 தொகுதிகளுக்கு கடந்த 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மகாராஷ்டிராக மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றுள்ளார்.

    பீகார் மாநிலம் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மற்றொரு தொகுதியான கோபால்கஞ்சில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் குசும்தேவி வெற்றி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய்யும், உத்தரபிரதேசத்தில் கோலாகோகர்நார் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரியும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல் தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் குஷ்குந்த்லா பிரபாகர் ரெட்டி 12 சுற்றுகளின் முடிவில் 82,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.  ஒடிசா மாநிலம் தாம்நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக மீண்டும் பெற்றி பெற்றுள்ளது.

    ×