என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி காந்தி மார்க்கெட்"

    • காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி.
    • முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருச்சி பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, என்எஸ்பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வியாபாரிகளை தாக்கி வழிப்பறி செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்தநிலையில் காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சி வைரலாகி உள்ளது.

    இந்த சம்பவம் கடந்த 4ம் தேதி மாலை 3 மணிக்கு நடந்துள்ளது. முதியவர் அப்பகுதியில் நடந்து செல்லும் போது மூன்று சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து தாக்கி கீழே தள்ளி விடுகின்றனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து செல்கின்றனர்.

    இந்த காட்சிகள் அங்குள்ள கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி வணிகர்கள் கூறும்போது, மாநகரில் கஞ்சா, போதை ஊசி மாத்திரை பழக்கத்துக்கு அடிமையாக்கி உள்ள சிறுவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை, இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, வால்டின் ஜோப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற சம்பவங்களை யாராவது கண்டித்தாலோ தட்டி கேட்டாலோ அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. ஆகவே போலீசார் இது போன்ற சமூக விரோத கும்பலை ஒடுக்கி, வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • இனிவரும் காலங்களிலும் மழை அதிகரித்தால் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மத்திய பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் தினமும் மொத்த மற்றும் சில்லறை காய்கறி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இங்கிருந்து அருகாமையில் உள்ள சில மாவட்டங்களுக்கும் காய்கறி சப்ளை செய்யப்படுகிறது.

    அந்த அடிப்படையில் காந்தி மார்க்கெட்டுக்கு தினமும் 250 டன் சின்ன வெங்காயம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து இங்கு வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவமழை பாதிப்பினால் சின்ன வெங்காயம் வரத்து சரிந்துள்ளது. இதனால் விலையும் மெல்ல மெல்ல உயர்ந்து விட்டது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.100 விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் ரூ.80-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்றைய தினம் மேலும் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

    இதுபற்றி திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொறுப்பாளர் கமலக்கண்ணன் கூறும் போது, மழையின் காரணமாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இன்று 50 டன் சின்ன வெங்காயம் மட்டுமே திருச்சி மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது. விலை ஏற்றத்தினால் சின்ன வெங்காயம் வாங்குவதை மக்கள் குறைத்துள்ளனர்.

    சாம்பாருக்கு அதிகம் சின்ன வெங்காயம் பயன்படுத்துகிறார்கள். தற்போது விலை ஏறி உள்ளதால் அதற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.40 என்ற அளவில் உள்ளதால் அதன் விற்பனை அதிகரித்து உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களிலும் மழை அதிகரித்தால் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது என்றார்.

    ×