என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "61.89 டன் காய்கறிகள் விற்பனை"

    • உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • நேற்று ஒரே நாளில் 6 உழவர் சந்தைகளில் 61.89 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இங்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் மற்ற இடங்களை விட இங்கு காய்கறி விலை குறைவாக விற்கப்படுகிறது.

    இதனால் உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று முகூர்த்த நாள் மற்றும் பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை முதலே உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று ஒரே நாளில் 6 உழவர் சந்தைகளில் 61.89 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. இந்த காய்கறிகள் ரூ.18 லட்சத்து 4 ஆயிரத்து 735-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×