என் மலர்
நீங்கள் தேடியது "வேலம்மாள் கல்லூரி"
- காலை, மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி.
- கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி இலக்குகளை அடைய மாணவர்களுக்கு அறிவுரை.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ஃப்ரஷர்ஸ் டே வெகுவிமர்சையாக நடைபெற்றது.
காலை மற்றும் மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினர்களாக ஜோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்ணிங் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, வழக்கறிஞர் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரை நிகழ்த்தினர்.

கல்லூரியின் இயக்குனர் எம்.வி.எம் சசிகுமார், கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.பாலாஜி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், இயக்குனர் எம்.வி.எம். சசிகுமார் , ஆலோசகர்கள் பேராசிரியர். கே.ரசாக் மற்றும் வாசு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றனர்.
மாணாக்கர்கள் தவறான பாதையில் சென்றுவிடாமல் மிகுந்த ஒழுக்கத்துடன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ். சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார்.