search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரி ஜெய்சங்கர்"

    • அரசுமுறை பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
    • அங்கு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    ஜெனீவா:

    அரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.சி-814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மந்திரி ஜெய்சங்கர் அளித்த பதிலளித்து கூறியதாவது:

    இந்த வெப் தொடரை இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் என் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    1984-ம் ஆண்டிலும் ஒரு விமான கடத்தல் நடந்தது. இண்டியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தை காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் துபாய்க்கு கடத்தினர்.

    அப்போது இளம் அதிகாரியாக இருந்த நான் இந்திய வெளியுறவு துறையின் கையாளும் குழுவில் ஒருவனாக இருந்தேன். மொபைல் போனில் என் அம்மாவை அழைத்து, 'விமானத்தை கடத்தியுள்ளனர். என்னால் வீட்டுக்கு வரமுடியாது' என கூறினேன்.

    அதன்பின், கடத்தப்பட்ட விமானத்தில், என் தந்தையும் இருப்பதைக் கண்டுபிடித்தேன். இது ஒரு பெரிய கதை.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒருபுறம் கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்தேன். மறுபுறம், விமானக் கடத்தல் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தேன் என தெரிவித்தார்.

    • அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
    • அந்நாட்டு அரசு மற்றும் காவல்துறையிடம் இந்திய தூதரகம் புகார் அளித்து விசாரணை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களுடனான புகைப்படங்களை இந்து- அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமெரிக்க கோவில் சுவரில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எழுதிய எதிர்ப்பு வாசகங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் இதுபோன்ற சக்திகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. அங்குள்ள இந்திய தூதரகம் அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
    • பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது என மத்திய மந்திரிகள் புகழாரம் சூட்டினர்.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 10-வது தடவையாக தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதாக அவர் உறுதிபட தெரிவித்தார். அவரது உரைக்கு மத்திய மந்திரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:

    பிரதமர் மோடியின் உரை உத்வேகம் அளிப்பதாக இருந்தது. சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தில் இந்தியாவின் இலக்குகளை அவர் பட்டியலிட்டார். மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத் தன்மை ஆகிய 3 அம்சங்களை உயர்த்திப் பிடித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலக நண்பன் ஆக உருவெடுத்ததாக தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

    • மத்திய மந்திரி ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டியிடுகிறார்.
    • குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    காந்திநகர் :

    கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால் அந்த இடங்களை நிரப்ப இம்மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    பதவிக்காலம் முடிவடையும் எம்.பி.க்களில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் ஒருவர். அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் சட்டசபையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன், குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுகல்ஜி தாகோர், தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

    எனவே, குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீண்டும் குஜராத்தில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, ஜெய்சங்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அவருடன் குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோரும் சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தாவிடம் ஜெய்சங்கர் வேட்புமனுவை அளித்தார்.

    பின்னர், ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:-

    மாநிலங்களவைக்கு குஜராத்தில் இருந்து போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் மோடி, பா.ஜனதா தலைமை மற்றும் குஜராத் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமர் மோடி தலைமையில் கடந்த 4 ஆண்டுகளில் வெளியுறவு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களில் நானும் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பேன் என்று நம்புகிறேன்.

    மோடி ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுடான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை அதிகரித்துள்ளோம். பாதுகாப்பு அம்சத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஒரு அண்டை நாடு, பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது. நாம் அந்த சவாலை வலிமையாக எதிர்கொண்டுள்ளோம். நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீதம் உள்ள 2 இடங்களுக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

    இதுபோல், மேற்கு வங்காளத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி உள்பட 6 பேரின் பதவிக்காலம் முடிவடைவதால், 6 காலியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    6 இடங்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று வேட்பாளர்களை அறிவித்தது.

    டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ரே, சமிருல் இஸ்லாம், பிரகாஷ் சிக் பரைக், சாகேத் கோகலே ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார்.
    • உக்ரைன், ரஷியா மோதல் தொடங்கியதில் இருந்து ஜெய்சங்கரும் லாவ்ரோவும் சந்திப்பது இது 5வது முறை

    மாஸ்கோ:

    வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ளார். ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கடந்த பிப்ரவரியில் உக்ரைன், ரஷியா இடையே மோதல் தொடங்கியதில் இருந்து ஜெய்சங்கரும் லாவ்ரோவும் இதுவரை நான்கு முறை சந்தித்துள்ளனர். இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், மாஸ்கோவில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    இந்த ஆண்டில் இது எங்களது ஐந்தாவது சந்திப்பு. எங்கள் பேச்சுக்கள் ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் குறிப்பிட்ட பிராந்திய பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

    சர்வதேச நிலைமையைப் பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகள் நிலவிய கொரோனா பெருந்தொற்று, நிதி அழுத்தங்கள் மற்றும் வர்த்தக சிக்கல்கள்; இவை அனைத்தும் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக, உக்ரைன் - ரஷியா மோதலால் ஏற்பட்டுள்ள விளைவுகளை தான் இப்போது பார்க்கிறோம்.

    உக்ரைன்-ரஷியா இடையேயான மோதலை பொறுத்தவரையில், பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் கடுமையாக வலியுறுத்துகிறது. பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற வற்றாத பிரச்சினைகளும் உள்ளன என தெரிவித்தார்.

    ×