என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடவுப்பணி"
- அபிராமம் பகுதியில் பருத்தி நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- அதிக மகசூல் கிடைப்பதுடன், தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படுகிறது.
அபிராமம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, அபிராமம் சுற்று வட்டார பகுதிகளில் எள், மிளகாயை தொடர்ந்து சிறுதானிய பயிர்களும், பயிறுவகைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருத்தி சாகுபடியில் விவசா யிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பருத்தி விதைப்புக்கு ஏற்ற தை, மாசி மாதம் என்பதால் கருகிய நெல் வயல்களில் உள்ள பயிர்களை கலைகொல்லி மற்றும் டிராக்டரில் உழவு செய்து அழித்துவிட்டு பருத்தி பயிர்களை நடவு செய்கின்றனர். பருத்தி விவசாயத்திற்கு தண்ணீர் தேவை இல்லாததால் முளைப்பதற்கு ஏற்ப வயலில் ஈரப்பதமும், இடை இடையே லேசான சாரல் மழையும், பெய்தாலே பருத்தி விவசாயத்தில் முழுமையான மகசூல் பெறமுடியும்.
மேலும் அதிக வருவாய் கிடைக்கும் என்பதால் அபி ராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பருத்தி விதைப்பில் விவசா யிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கர்ணன், ராமு ஆகியோர் கூறுகையில், இந்த ஆண்டு நெல் சாகு படிக்கு போதிய தண்ணீர் இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் காலதாமதாகவும் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.இருந்தபோதிலும் பருத்தி விவசாயத்தில் அதிக மகசூல் கிடைப்பதுடன், தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படுகிறது.
இதனால் தற்போது பெரும்பாலான கிராமங்களில் பருத்தி நடவு செய்யும் பணியில் அதிகமாக ஈடுபட்டுவருகிறோம் என்றனர்.
- நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும்.
- விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் அறிக்கை விடுத்துள்ளார்.
மூலனூர் :
திருப்பூர் மாவட்டம் மூலனூர், கருப்பன் வலசு, தலையூர், எல்லப்பாளையம் பெரமியம், ஆத்துக்கால்புதூர், காளிபாளையம், வீராச்சிமங்கலம், படுகை தாராபுரம் ஆகிய அமராவதி ஆற்றுப் படுகைகளில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அமராவதி அணையின் நீர் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் நடைபெறும் நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும் நெல் ரகங்களான ஏடிடி 45, ஏடிடி37, சாவித்திரி போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.
இதில் குறைந்த நாட்களில் மகசூல் தரும் இதில் ஏ.டி.டி. 45 ரக நெற்பயிர்களை அதிக அளவில் நடப்படுகிறது. இந்த ரக நெல் ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதால் இந்த ரக நெல் பயிரை இப்பகுதி விவசாயிகள் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணி சுமார் 90 சதவீத நடவு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதுபற்றி அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையால் பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அதிக அளவில் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் மற்றும் நூல் மில்களுக்கு சென்று விடுவதால் நெல் நடவு செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த வேலை செய்ய யாரும் முன்வருவதில்லை.
இதன் காரணமாக தற்போது தர்மபுரி, சேலம், ஈரோடு போன்ற வெளியூர்களிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் ஆட்கள் வரவழைக்கப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எந்திர நடவு செய்வது இப்பகுதியில் அறிமுகம் இல்லாததாலும் அதன் பயன் இப்பகுதி விவசாயிகள் தெரிவதில்லை. இதே நிலை நீடிக்குமானால் வரும் காலங்களில் விவசாயம் செய்ய இந்தப்பகுதிகளில் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்று அவர் கூறினார்.
விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் கே.ஜெயராமன் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், விதை விற்பனையாளர்களை கண்காணிக்கவும், விதை சட்டத்தை அமல்படுத்தவும், தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையின் விதை ஆய்வுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் 138 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. அதில் 50-க்கும் மேற்பட்ட நெல் விதை உற்பத்தி நிலையங்கள் உள்ளது. அரசுத்துறைகளான வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்புத்துறைகளான வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் கூட்டுறவு விற்பனை மையங்கள், மற்றும் விதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் வட்டாரத்தில் தற்போது நெல், மக்காசோளம், பருத்தி மற்றும் பயறு வகைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரியாக விதை இருப்பு பதிவேட்டில் இருப்பு வைத்து, முளைப்புத்திறன் பரிசோதனை செய்த முடிவு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் கண்டிப்பாக ஒவ்வொரு விதை விற்பனையாளரும் கடையில் வைத்திருக்கவேண்டும். மேலும் விதை விற்பனையாளர் கொள்முதல் செய்த விதைகளை பாதுகாப்பாகவும், முறையாகவும் விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விதை இருப்பு பதிவேடு, விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும். கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் மற்றும் பிற ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
விதைகள் விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியல் கட்டாயம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும், அதில் பயிர், ரகம், விதைக்குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட வேண்டும். விற்பனை பட்டியலில் விவசாயிகளின் கையொப்பம் பெறப்பட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 மற்றும் விதை (கட்டுப்பாடு) ஆணை 1983 ஆகிய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்