search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "45 ஆயிரத்து 580 வாக்காளர்கள்"

    • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் புதிதாக 13,508 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் 55,172 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷனி சந்திரா பெற்றுக்கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 5.1.22 படி மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் இருந்தனர்.

    இதில் புதிதாக 13,508 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் 55,172 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளிலும் சேர்த்து 2,222 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு கிழக்கில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 491 வாக்காளர்களும், ஈரோடு மேற்கில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 026 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 942,

    பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 28,032 பவானி தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 339, அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 15,222 கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 100 பவானிசாகர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 428 பேர் உள்ளனர். என மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 572, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 98 ஆயிரத்து 869 பேர் உள்ளனர். மற்றவர்கள் 139 பேர் உள்ளனர்.

    வழக்கம்போல் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

    ×