என் மலர்
நீங்கள் தேடியது "நாணயங்கள் கண்காட்சி"
- சர்வதேச ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.
- மேயர் எஸ். ஏ.சத்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.
ஓசூர்,
ஓசூர் அருகே ஜூஜூவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியை, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ். ஏ.சத்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.
கண்காட்சியில், 150 நாடுகளின் மற்றும் இந்திய அரசர்கள் காலத்து ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஓசூர் மாநகராட்சி நகரமைப்புக்குழு தலைவர் எம்.அசோகா, கல்வித்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்தி பேசினார்கள்.
ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வரலாறு குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கு,மாணவ மாணவியர் விளக்கி கூறினர். மேலும், மண்டல தலைவர் ரவி, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், பேகேபள்ளி ஊராட்சி தலைவர் சைத்ரா அருண், மாநகராட்சி கல்விக்குழு உறுப்பினர்கள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர், ஆனந்த ரெட்டி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் உள்பட பலர் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
- பழைமையான நாணயங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
- வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் பாண்டியன் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் வரவேற்றார். 2-வது வார்டு கவுன்சிலர் மாலதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். மாற்றுத் திறனாளிகள் வாரத்தையொட்டி அந்த பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான இளம்ஞாயிறு என்பவரை கவுரவப்படுத்தும் வகையில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்தியாவின் பழைமையான நாணயங்கள் முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள நாணயங்களையும், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் நாணயங்கள் எங்கு தயார் செய்யப்படுகிறது? எந்த ஆண்டில் எந்தெந்த நாணயங்கள் தயார் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது என்பதையும், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், பகத்சிங், ரவீந்திரநாத்தாகூர் உள்பட முக்கிய தலைவர்கள் படத்துடன் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மாணவர்கள் விளக்கிக் கூறினார்கள். இதேபோல் வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கண்காட்சியை பார்வையிட்டு வெளியே வந்தவர்களிடம் மாணவர்கள் அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில் ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாணயங்களை பார்வையிட்டு, தகவல்களை அறிந்துக் கொண்டனர்.
- விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கி தொல்லியல் மன்றத்தை தொடங்கி வைத்தார்.
- விழாவையொட்டி பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்ட மாதிரிகள் மற்றும் பழங்கால கருவிகள் கண்காட்சி நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொல்லியல் மன்றம் தொடக்க விழா நடை பெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கி தொல்லியல் மன்றத்தை தொடங்கி வைத்தார். சமூகவியல் ஆசிரியை மஞ்சுளா தொல்லியல் மன்றத்தின் நோக்கங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே விளக்கி பேசினார்.
இந்த விழாவையொட்டி பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்ட மாதிரிகள் மற்றும் பழங்கால கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிரியகள் உமாசங்கரி, செந்தில், நீலாம்பிகை மற்றும் பலர் பேசினார்கள். முடிவில் ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.