என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பணியாளர்"
- சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
- இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- வேல்முருகன் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50) இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று பணி முடிந்து இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்காமல் வேலுமுருகன் அலறினார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.