என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீண்ட நேரம் காத்திருப்பு"

    • மின் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் கூடுதல் கவுண்டர் திறக்க வலியுறுத்தி உள்ளனர்.
    • மதுரை வில்லாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    அவனியாபுரம்

    மதுரை வில்லாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. சிறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை கட்டுவதற்கு இப்பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்றால் அங்கு ஒரு கவுண்டரை மட்டும் திறந்து வைத்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் மின்சார அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

    மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். தினந்தோறும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள மக்கள் ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டு இந்த மின்சாரத்தை கட்டணத்தை செலுத்தும் நிலை உள்ளது.

    எனவே கூடுதல் கவுண்டர்களைத் திறந்து உடனடியாக கட்டணம் செலுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×