search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீரகம் தானம்"

    • தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
    • தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.

    டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.

    மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

    இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சிறுநீரகம் பாதிக்கப்பட்ட லல்லுபிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய அவரது மகள் ரோஷினி முன்வந்துள்ளார். சிங்கப்பூரில் வசித்து வரும் ரோஷினி இதற்காக டெல்லி வந்துள்ளார்.

    ×