search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு கருத்தரங்கு"

    • பைசு ஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி பாத்திமா வரவேற்றார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பைசு ஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    இதில் மதுரை தியாகராஜர் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் வரதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய கோட்பாடுகளை ஆராய்ச்சியில் பயன்ப டுத்தும் முறை பற்றி விரிவாக பேசினார்.

    ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை யில் நடைபெற்ற விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ் பேசினார்.

    முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி பாத்திமா வர வேற்றார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ரூபிணி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வை நிர்மலா தொகுத்து வழங்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பழனி சாமி, பெருமாள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • மாணாக்கர்கள் தங்களது தகவல் தொடர்பு திறனை மேம்படுத்திக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி மிக எளிமையாக எடுத்துரைத்தார்.
    • நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.

    தருமபுரி,

    தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு 'சிறந்த தகவல் தொடர்பு திறன் பெற்றிருத்தல் வாழ்வின் வெற்றிக்கு ஓர் வாயில் படி' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் கரூர் வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் குணசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் மாணாக்கர்கள் தங்களது தகவல் தொடர்பு திறனை மேம்படுத்திக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி மிக எளிமையாக எடுத்துரைத்தார்.

    நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் கோவிந்தராஜ் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவி யுவஸ்ரீ வரவேற்றார். இறுதியாக நிர்மலா நன்றி கூறினார். இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடு களையும் வைஷ்ணவி, லோகேஸ்வரி, கோகிலவாணி ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×