search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கொலையில்"

    • கதிர்வேலை திருவாச்சி கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார்.
    • இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் ரோடு, திருவேங்கடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி சாந்தா (வயது 54). கணவனை இழந்த இவர் தனது மகள் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் இரவு பெருந்துறை வார சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையின் முன் படுத்துக்கொள்வார். கடந்த வாரம் சாந்தா வாரச்சந்தை பகுதியில் உள்ள கடையின் அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். கொலையாளியை பிடிப்பதற்காக பெருந்துறை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்து றையை அடுத்துள்ள திருவாச்சி கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு வாலிபர் வார சந்தை பகுதியில் ஒரு பெண்ணை கொலை செய்ததாக சரணடைந்தார்.

    கிராம நிர்வாக அலுவலர் அவரை விசாரித்த போது அவர் திருவாச்சி ஊராட்சி, பூவம்பாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 47) என்பதும், கடந்த வாரம் பெருந்துறை வாரச்சந்தை பகுதியில் கொலை செய்யப்பட்ட சாந்தாவுக்கும் இவருக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து விசாரி க்ைகயில் சம்பவத்தன்று இரவு சாந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் அருகில் இருந்த தனது நண்பர்களான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடியை சேர்ந்த கோபி என்கிற பாலமுருகன் (33), மற்றும் பெருந்துறை பவானி ரோடு, கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (33) ஆகியோர் உதவியுடன் சாந்தாவின் முகத்தில் மற்றும் தலையில் கட்டை யால் பலமாக தாக்கிய தாகவும், ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் இறந்த சாந்தாவை கீழே இழுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்று விட்டோம்.

    இந்த நிலையில் எங்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருவதை தெரிந்து தற்பொழுது நான் உங்களிடம் சரண் அடைந்ததாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து கதிர்வேலை திருவாச்சி கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார். பெருந்துறை போலீசார் கதிர்வேலுவிடம் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவருடன் கொலை செய்ய உதவியாக இருந்த கோபி என்கிற பால முருகன், ஆறுமுகம் ஆகியோரை பெருந்துறை காஞ்சிகோவில் ரோடு, கருமாண்டிசெல்லி பாளையம் பகுதியில் உள்ள சித்தம்பட்டி குளம் அருகே சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    ×