search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய நிதிமந்திரி"

    • மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • புதுச்சேரிக்கு நிதி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். இதனை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.

    இக்கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், தலைமை செயலர் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் முன் உதாரணமாக எப்போதும் திகழ வேண்டும். கடந்த 4 மாதங்களில் 4 ஆயிரம் பயனாளிகள் மத்திய அரசு திட்டங்களில் புதுச்சேரி அரசு சேர்த்துள்ளது. விடுப்பட்ட பயனாளிகளையும் இத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

    அடுத்த ஓராண்டிற்குள் மத்திய அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். புதுச்சேரியில் பழங்குடியினர் குறைவாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் உள்ளனர்.

    அவர்களிடம் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்து பயனடைய செய்ய வேண்டும்.

    புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும். புதுச்சேரிக்கு நிதி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சகத்திடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது
    • கடன் தொகையை வசூலிக்கும் இந்த நடவடிக்கைகள் தொடரும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசியதாவது:

    நாட்டில் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. எனினும், கடன் பெற்றவர்கள் இந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பில் தொடர்ந்து உள்ளனர். அவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்கும் இந்த நடவடிக்கைகள் தொடரும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்த வாரா கடன்கள் திருப்பி செலுத்தப்பட வேண்டிய கடன்களின் வரிசையிலேயே வகைப்படுத்தப்படும். அவற்றை திருப்பி வசூலிக்கும் முயற்சியில் தொடர்புடைய வங்கிகள், வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும்.

    இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் பொது துறை வங்கிகள் ரூ.4,80,111 கோடியை மீட்டெடுத்து உள்ளன. அவற்றில், வர்த்தக வங்கிகளின் கணக்கில் இருந்து இருப்பு நிலை அறிக்கைக்காக நீக்கப்பட்ட ரூ.1,03,045 கோடி கடன்களும் அடங்கும். இவ்வாறு அவர் பேசினார். 

    • நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும்.
    • 44 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருள் அழிக்கப்பட்டுள்ளது.

    மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் 65-வது நிறுவன தினக் கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: 


    வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். மற்ற அமலாக்கத்துறை ஏஜென்சிகளுக்கு அவர்கள் உதாரணமாகத் திகழ்கின்றனர். இது பாராட்டுக்கு உரியது.  இந்தியாவில் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்படுவதை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

    75 ஆம் ஆண்டு சுதந்திர கொண்டாட்ட அமிர்தப் பெருவிழா காலத்தில், நாடு முழுவதும் 14 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 44 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப் பட்டிருக்கிறது. இது வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகத்தின் வல்லமையை பறைசாற்றுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில், மூளையாக செயல்படுவோரையும், நிதியுதவி அளிப்பவர்களையும் கைது செய்ய வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பம், தர ஆய்வுகளை பயன்படுத்தி தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். சமூக விரோத சக்திகள் தகவல்களைத் திருடுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரியங்கா காந்தியை வரவேற்க காத்திருந்தவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
    • பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக தகவல்.

    சிம்லா:

    இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவுடைந்தது. இந்நிலையில் கடைசிநாள் பிரச்சாரத்திற்காக அம்மாநிலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயாலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்க தலைநகர் சிம்லாவில் உள்ள மால் சாலையில் காங்கிரஸ் மகளிர் அணியினர் காத்திருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காரில் சென்றார். அவரை கண்ட காங்கிரஸ் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் கை அசைத்தனர். இதை கண்ட நிதி மந்திரி, காரை நிறுத்தி சொல்லி கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதை சமூக வளைதளங்களில் அவர்கள் பகிர்ந்தனர். நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக இமாச்சல் பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    ×