search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபாப்"

    • அரை மணி நேரமாகியும் ஆர்டர் வராததால் பொறுமையிழந்த ஹர்னீத் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
    • தனது மகனுடன் அங்கு வந்த கடை உரிமையாளர் ஊழியர்களுடன் சேர்ந்து ஹர்னீத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்த உணவு ஏன் வரவில்லை என்று கேட்ட வாடிக்கையாளரை உணவக முதலாளி கபாப் செய்யும் கம்பியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் காலையில் தெருவோர தாபாவில் 29 வயதான ஹர்னீத் சிங் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

    அரை மணி நேரமாகியும் ஆர்டர் வராததால் பொறுமையிழந்த ஹர்னீத் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தகவலறிந்து தனது மகனுடன் அங்கு வந்த கடை உரிமையாளர் ஊழியர்களுடன் சேர்ந்து ஹர்னீத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

    மேலும் கடையில் கபாப் செய்ய வைத்திருந்த கம்பியை எடுத்து கடை உரிமையாளர் ஹர்னீத்தை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஹர்னீத் மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.
    • செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சுகாதாரத்துறை சமீபத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல உணவகங்களில் இருந்து சுமார் 250 பானி பூரி மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதியானது.

    மேலும் இந்த ஆய்வில் நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.

    கோபி மஞ்சூரியன் மற்றும் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் முழுமையான பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
    • ஒரு பிளேட்டில் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேவையான பொருட்கள்

    பலாக்கொட்டை- ஒரு கப்

    பலாச்சுளை- ஒரு கப்

    பூண்டு - 4 பல் (பொடிதாக நறுக்கியது)

    இஞ்சி 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

    பச்சை மிளகாய் - 2 (பொடிதாக நறுக்கியது)

    கரம் மசாலாத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்

    சீரகத்தூள் - 4 டீஸ்பூன்

    கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்

    சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள்- டீஸ்பூன்

    உலர் பழங்கள்- 2 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு-தேவைக்கு ஏற்ப

    உப்பு - தேவைக்கு ஏற்ப

    எண்ணெய் - பொறிப்பதற்கு

    சட்னி தயாரிக்க:

    பலாக்கொட்டை - கப் (வேகவைத்தது)

    பச்சைமிளகாய் - 1

    உப்பு- தேவைக்கு

    எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்

    சட்னி செய்முறை

    பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும், அதைஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.

    பலாப்பழ கபாப் செய்முறை:

    ஒரு பிளேட்டில் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் பலாச்சுளைகளை கட் செய்து போட்டு கலந்து சூடான எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்.

    பலாக்கொட்டைகளை வேகவைத்து அதன் மேல் தோலை நீக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும். இந்த கலவையுடன் வேகவைத்த பலாக்கொட்டைகளை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    இந்த விழுதுடன் பொடியாக நறுக்கிய உலர் பழங்களை சேர்த்து நன்றாக பிசையவும். இந்த கலவையை விரும்பிய வடிவில் தயார் செய்து, தவாவில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறலாம்.

    • சிக்கன், மட்டனில் கபாப் செய்து இருப்பீங்க.
    • இன்று காய்கறியில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - அரை கிலோ

    பச்சை பட்டாணி - 50 கிராம்

    கேரட் - 1,

    பீன்ஸ் - 10,

    காலிஃப்ளவர் - கொஞ்சம்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

    உப்பு, வெண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் போட்டு வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் ஆறவைத்து அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    இத்துடன் மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கலந்து மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கிரில் கம்பியில் வெண்ணெய் தடவி கொலுக்கட்டை போல் மாவை கம்பியில் பிடித்து வைக்கவும். இதனை பார்பிக்யூ சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.

    அவ்வப்போது உணவுகள் மீது வெண்ணெய் தடவி விட்டால் சட்டென கருகாது. வெந்ததும் மெதுவாக கம்பியில் இருந்து உருவி, சாஸ், உடன் பரிமாறவும். பார்பிக்பூ அடுப்பு இல்லாதவர்கள் தோசைக்கல்லில் போட்டும் எடுக்கலாம்.

    இப்போது சூப்பரான வெஜிடபிள் சீக் கபாப் ரெடி.

    இதில் எந்த காய்கறிகளை வேண்டுமானலும் சேர்த்து செய்யலாம்.

    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    வினிகர் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

    மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.

    மீனில் உள்ள தோல், முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    அருமையான பிஷ் கபாப் ரெடி.

    • ஒரு முட்டையில் 72 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் இருக்கிறது.
    • முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    வேக வைத்த முட்டை- 4

    சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

    சீரகத் தூள்- 1/4 டீஸ்பூன்

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்

    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    சோள மாவு- ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

    மல்லித் தூள்- 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    உப்பு- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை- சிறிதளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    மசாலா செய்ய :

    வெங்காயம் - 1

    சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    உப்பு- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை- சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ளவும்.

    துருவிய முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

    இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.

    இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

    ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.

    கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும்.

    இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.

    அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.

    ×