என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்முகையா எம்.எல்.ஏ. ஓட்டப்பிடாரம்"

    • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சண்முகையா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.

    ஓட்டப்பிடாரம்:

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்துதுறை அதிகாரி களுடனான ஆலோசனை கூட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    டெங்கு, மலேரியா

    மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். குளங்கள் உள்ளிட்ட இடங்களில் உடைப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி போதுமான உரங்களை வினியோகிக்கப்படுகிறதா? என வேளாண்மை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாசில்தார்கள் நிஷாந்தினி, செல்வகுமார், ராதாகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர் பாண்டியராஜன், யூனியன் கூடுதல் ஆணையாளர் வெங்கடாசலம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஆணையாளர் சுரேஷ், வேளாண்மை துறை உதவி இயக்குனர்கள் சிவகாமி, சந்திரகலா, தோட்டக்கலை அலுவலர்கள் ஆசிப், ஜெயந்தன், விஜய், மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், சித்தி விநாயகமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×