என் மலர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற"
- முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொகை அனுமதிக்கப்படும்.
ஈரோடு:
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகள் பெற்று இருப்பின் விண்ணப் பிக்கலாம். ஆண் குழந்தை யின்றி 2 பெண் குழந்தைகள் (2-வது பெண் குழந்தைக்கு 3-வயதுக்குள்) அல்லது ஒரு பெண் குழந்தை இருப்பின் (3-வயதுக்குள்).
பெற்றோர்களில் ஒருவரில் 40 வயதிற்குள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் பெற்று இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொகை அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே இத்திட்டத்தில் பயனடைந்து முதலீட்டு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் சம்மந்தப்பட்டவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் வரும் 30-ந் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணி யாளர்களை அணுகுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.