என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடுமலை அமராவதி அணை"
- அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
- பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு,சிறு ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 84.20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.
அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உபரிநீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் அமராவதி ஆற்றங்கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாகக்கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து அணை முழு கொள்ளளவை அடைந்து அமராவதி பிரதான கால்வாய் மற்றும் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து 422 கன அடியில் இருந்து 1,619 கன அடியாக அதிகரித்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 57.29 அடியில் இருந்து 59.65 அடியாக அதிகரித்து ஒரே நாளில் 2.34 அடி உயர்ந்துள்ளது. மேலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கொடைக்கானல் மேற்கு பகுதி மலைகளில் பெய்யும் கன மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மூணாறு, மறையூர், கோவில்கடவு மற்றும் வால்பாறை கிழக்கு பகுதி மலைத்தொடர், கொடைக்கானல் மேற்கு பகுதி மலைகளில் பெய்யும் கன மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்றிரவு 5 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வரத்து இருந்ததால் அணையில் இருந்து உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
90 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 87.87 அடியாக உள்ளது. அணையில் தற்போது 3.88 டிஎம்சி., நீர் இருப்பு உள்ளது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் அமராவதி ஆற்றில் எந்நேரமும் உபரி நீர் திறப்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து கரையோர பகுதிகளை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்
உடுமலை அருகே புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை உள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோவிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அன்றாடம் வந்து செல்கின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்