என் மலர்
நீங்கள் தேடியது "திண்டுக்கல் கோர்ட்டில் 3600 மனுக்கள் மீது விசாரணை"
- திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
- மாவட்டம் முழுவதும் 9 அமர்வுகளில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3600 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
நிரந்தர மக்கள் நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினராக கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடத்தப்பட்டது. மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள்,
சமாதானம் செய்யக்கூடிய குற்றவழக்குகள், ஜீவானாம்சம், நிலஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை வழக்கு, நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் 9 அமர்வுகளில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3600 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், மகளிர் நீதிபதி சரண், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கருணாநிதி, தலைமை குற்றவியல் நீதிபதி மோகனா மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்த விவசாயி பிச்சைமுத்து குடும்பத்திற்கு ரூ.12லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை நீதிபதி சிவகடாட்சம் வழங்கினார். இதேபோல பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.