search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச கண் சிகிச்சை"

    • சிறப்பு விருந்தினராக உதவி ஆளுநர் ஞானசேகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்
    • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காரமடை விநாயகர் வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், காரமடை லாரி உரிமையாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

    காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் விஜயபிரபு தலைமை தாங்கினார். செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக உதவி ஆளுநர் ஞான சேகரன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.அரவிந்த் கண் மருத்துவ மனை டாக்டர்கள் அபி ப்ஷா, ஸ்ரீதா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.கார மடை லாரி உரிமையாளர் சங்க தலைவர் ரவிக்குமார், ரோட்டரி சங்க உறுப்பி னர்கள் கே.ஆர்.விக்னேஷ், சிவசதீஷ்குமார், சரவணன், ஜெயக்குமார், காமராஜ், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் மாணிக்காபுரம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சியும், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மாணிக்காபுரம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

    பல்லடம் அரசு மருத்துவ மனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மருத்துவ முகாமில் பள்ளி கல்விக்குழுத்தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது.
    • சொட்டு மருந்து, உணவு, போக்குவரத்து, தங்குமிடம், கருப்பு கண்ணாடி ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், முத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. முகாமில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட அரசு கண் மருத்துவர் குழுவினர் மூலம் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

    மேலும் முகாமில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக நாளையே அழைத்து செல்லப்பட்டு அங்கு உள்வி லென்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சொட்டு மருந்து, உணவு, போக்குவரத்து, தங்குமிடம், கருப்பு கண்ணாடி ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே முகாமில் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி மற்றும் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • முகாமில் மொத்தம் 710 பயனாளிகள் கலந்து கொண்டனர்.
    • வேணுகோபாலு, செயலாளர் கே.வி.விஷ்ணு செந்தூரன் ஆகியோர் வரவேற்றனர்.

     தாராபுரம்:

    தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர் அ.சேனாபதி கவுண்டரின் 31-வது நினைவு நாள் மற்றும் கல்லூரியின் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் 26-ம் ஆண்டு மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமான கே. எஸ். என் .வேணுகோபாலு தலைமை தாங்கினார். தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு கலந்து கொண்டு கல்லூரி நிறுவனர் சேனாபதி கவுண்டர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, ரிப்பன் வெட்டி முகாமை தொடங்கி வைத்தார்.

    அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நரேந்திரன்,கல்லூரி பொருளாளர் கே.வி.தேன்மொழி வேணுகோபாலு, செயலாளர் கே.வி.விஷ்ணு செந்தூரன் ஆகியோர் வரவேற்றனர். அாிமா மாவட்ட நல்லெண்ணத்தூதுவா் கோபாலகிருஷ்ணன்,பசுவதா டெய்ரி செல்வரத்தினம், மணிவண்ண சுதேவன்,கல்லூரி அறங்காவலர்கள் சுவாதி ஹர்சன், டாக்டர் ஹர்சன், டி. அபிராமி விஷ்ணு செந்தூரன், சங்கரண்டாம்பாளையம் இளைய பட்டக்காரர் கணேஷ், அறங்காவலர்கள் சவுந்திரராஜன், எஸ்.கே.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மொத்தம் 710 பயனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 165 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 4 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுவரை நடைபெற்ற முகாம்களில் 14 ஆயிரத்து 855 பேர் கலந்து கொண்டதில் 5ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில் அரிமா ஆலோசனை குழு உறுப்பினா்கள் தங்கராசு, செல்லமுத்து, மண்டல தலைவா் சண்முகவேல், வட்டார தலைவா் கோபால கிருஷ்ணன்,நகர அாிமா சங்க தலைவா் ஆயிமுத்து ரத்தினம்,செந்தில் குமார்,சங்கரண்டாம்பாளையம் இளைய பட்டக்காரர் கணேஷ்,அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்கிற பழனிசாமி, காடேஸ்வரா பெரியசாமி, பொறியாளர் ஜேம்ஸ், நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த், இ.பி.கோவிந்தசாமி, ஆபிஸ் தோட்டம் செல்லமுத்து உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் கல்லூரி முதல்வர் முரளி நன்றி கூறினார்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் கோடங்கிபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் புதூர் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், செம்மிப்பாளையம் ஆரம்பசுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கோடங்கிபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார்.பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 12 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ முகாமில் ஊராட்சி செயலாளர் கண்ணப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 9 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கண் சிகிச்சை முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர். நேரு , மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×