என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "815.60 மி.மீ. மழை"
- ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை மழை பரவலாக பெய்ய தொடங்கியது.
மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைய தொடங்கியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக காலை 8 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.
இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை காரணமாக முக்கிய சாலை கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் கொடுமுடி, மொடக்குறிச்சி, ஈரோடு, பெருந்துறை, நம்பியூர், கவுந்தப்பாடி, கொடிவேரி, பவானி, சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மா பேட்டை, வரட்டுபள்ளம், குண்டேரி பள்ளம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாக இரவு நேரத்தில் கடும் குளிர் காற்று வீசியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஈரோடு மாநகர் பகுதி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி கோபி. பெருந்துறை. அந்தியூர் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் இன்று காலையும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வெளியே எங்கும் செல்லா மல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. தாளவாடிய மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் தோன்றியுள்ளன. வனப்பகுதியில் சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :
சென்னிமலை-93, கொடுமுடி-67, மொடக் குறிச்சி-63, ஈரோடு-56, பெருந்துறை-54, எலந்த குட்டைமேடு-52.60, நம்பியூர்-52, கவுந்தப்பாடி-49.20, கொடிவேரி-45, பவானி-44.4, அம்மாபேட்டை-39.40, சத்தியமங்கலம்-37, பவானிசாகர்-34.80, கோபி-32, வரட்டு பள்ளம்-31.60, குண்டேரி பள்ளம்-28.60. மாவட்டம் முழுவதும் 815.60 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்