என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜூனா விருது"

    • கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.
    • செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.

    இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய விருது வழங்கும் விழா இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்தது. உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தும் கோட்டைவிட்டது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இதில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியனானது.

    இந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச்சென்றார்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமியின் பெயரை இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் முகமது ஷமியின் பெயர் இல்லாத நிலையில், விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ ஒரு சிறப்பு கோரிக்கையாக ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், மிதாலி ராஜ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • அர்ஜூனா விருது வென்ற வைஷாலி செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.

    புதுடெல்லி:

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது.

    சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் ஆடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச் சென்றார்.

    இதற்கிடையே, விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கையாக முகமது ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்திருந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி, சாத்விக் ஜெயராஜ் ஜோடிக்கு அளிக்கப்படுகிறது.


    இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி உள்பட 26 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் பல உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
    • இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளவர்களுக்கு என்னுடைய அன்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் பல உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.

    அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை தங்கை வைஷாலி, ஸ்குவாஷ் வீரர் தம்பி ஹரிந்தர் பால் சிங் சந்து மற்றும் திறமையான பல விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகளை உருவாக்கி வரும் செஸ் பயிற்றுநர் R.B.ரமேஷ், கபடி விளையாட்டிற்கான பயிற்றுநர் சகோதரி கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு என்னுடைய அன்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீங்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமைகளை தேடித்தர எனது வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
    • கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    புதுடெல்லி:

    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.

    தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர். அர்ஜூனா விருதை 26 பேரும் பெறுகின்றனர்.

    விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

    • 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் ஆகிய 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நமது உலக செஸ் சாம்பியன் குகேஷ், நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது 2024க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    நமது பாரா தடகள வீரர்கள் மற்றும் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுகள் கிடைத்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    நம் அனைத்து விளையாட்டு வீரர்களும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் ஆகிய 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், விருது பெறும் தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!

    கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ் மற்றும் அர்ஜூனா விருது பெற்றுள்ள துளசி மதி, நித்தியஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்!

    தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×