search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் பிரச்சனை"

    • குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ளன.
    • அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி.

    ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் குழந்தைகள் மற்றும் ஆயுதங்கள் விதிமீறல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் குறித்து பேசினார். அதற்கு இந்தியாவுக்கான ஐ.நா.வின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர். ரவீந்திரா கடும் கண்டனம் தெரவித்ததுடன், தக்க பதிலடி கொடுத்தார்.

    குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ள நிலையில், அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி. எந்த தடையுமின்றி பாகிஸ்தானில் தொடர்ந்து மீறல்கள் நடைபெற்று வருகிறது.

    எங்கள் நாட்டிற்கு எதிராக ஒரு பிரதிநிதி கூறிய குற்றச்சாட்டுக்கு காலத்தின் நலன் கருதி இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது என குறுகிய பதில் அளிக்கிறேன். இந்த அடிப்படையற்ற கருத்துகளை நான் திட்டவட்டமாக நிராகரித்து அவர்களை கண்டிக்கிறேன் என்றார்.

    மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட பிரதிநிதி அல்லது அவரது நாடு எதை நம்பினாலும் அல்லது விரும்பினாலும், அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தன, எப்போதும் இருக்கும் என்றார்.

    • காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார்.
    • ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    புதுடெல்லி :

    மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ஒரு செய்தி சேனல் இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை தனது 'டுவிட்டர்' பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். இது, 1947-ம் ஆண்டு ஜூன் மாதமே நேருவுக்கு தெரியும். அப்போதைய வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு இதை தெரிவித்துள்ளார். ஆனாலும், ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்தபோது, தவறான சட்டப்பிரிவின்கீழ் நேரு ஐ.நா.வை அணுகினார். அதனால், பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளராக இல்லாமல், ஒரு வாதியாக பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. காஷ்மீரில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்துவது சரிதான் என்ற மாயையை நேரு தோற்றுவித்தார். 370-வது அரசியல் சட்டப்பிரிவை உருவாக்கினார்.

    மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரன்சிங், வரலாற்றை திரித்து, நேருவை பழியில் இருந்து விடுவிப்பதிலேயே குறியாக இருந்தார். பொய்யான வரலாற்றை புறந்தள்ளி, அப்போது என்ன நடந்தது என்பதை காஷ்மீர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×