என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூத்த விஞ்ஞானி"
- இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
- மூத்த விஞ்ஞானி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள மரைக்காயர் பட்டணம் பகுதியில் மத்திய அரசின், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவா்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பச்சை வரி இறால்கள் உற்பத்தி செய்யப்பட்டு கடலில் விடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் அலுவலர்கள் 16லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகளை படகில் எடுத்துச் சென்று மன்னாா் வளைகுடா கடலில் விட்டனர்.
இதுவரை சுமார் 5.80 கோடி பச்சை வரி இறால்கள் கடலில் விடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞாடினி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.
- சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
- பண்டைய காலத்தில் விவசாயத்துக்காகவே வானியல் கணிக்கப்பட்டது.
திருப்பூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஜோதிடமும் வானியலும் என்ற கருத்தரங்கு திருப்பூர் சமுத்திரா கிராண்ட் மஹாலில் நடந்தது.
இதில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின், விஞ்ஞான் பிரசார் மூத்த விஞ்ஞானி வெங்கடேசுவரன் பேசியதாவது:-
இந்தியாவிலும், மேலை நாடுகளை போல் அறிவியல் பூர்வமாக வானியல் வளர்ந்தது. ஆரியபட்டர், நல்லாச்சாரியார் போன்ற வானவியல் அறிஞர்கள், அறிவியல் பூர்வமாக வானியல் கோள் நகர்வு, கிரகணம் போன்றவற்றை கணித்தனர்.
சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. சந்திரன் நிற்கும் நட்சத்திரமே, ஒவ்வொரு நாளாக கணிக்கப்படுகிறது. சந்திரன், 27.3 நாட்களில் பூமியை சுற்றி வருகிறது. அப்போது, காலண்டர் முறை இல்லை. தேதி, நாள் கிடையாது.
நட்சத்திரத்தை கொண்டே நாட்கள் கணிக்கப்பட்டன. நிலா முழு நிலவாக இருக்கும் போது எந்த நட்சத்திரத்தில் நிற்கிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில் தமிழ் மாதங்கள் உருவாக்கப்பட்டன. கி.பி., 400க்கு முன் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் தேதி, நாட்கள், வாரம் ஆகிய விவரம் இல்லை. வாரம், தேதி, நாட்கள், மேலைநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டது.
பண்டைய காலத்தில் விவசாயத்துக்காகவே வானியல் கணிக்கப்பட்டது. குறிப்பாக மழையை கண்டறிந்து, பயிர் சாகுபடி செய்யவே வானியல் கணிக்கப்பட்டது.ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் வானியல் கணிப்புக்காகவே கிராமம் தோறும் கணியன் என்ற அரசு அலுவலர் நியமிக்கப்பட்டிருந்தனர். பயிர் சாகுபடி, மழை, விதைப்பு, அறுவடை போன்ற பணிகளுக்கு அவர்கள் வழிகாட்டியாக இருந்தனர்.பிற்காலத்தில், வானியலுடன் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை கலந்துவிட்டனர். இதற்கு பிறகே ஜோதிடம் உருவானது.
இன்றைய பஞ்சாங்கங்கள் மெய்யான தரவுகளை கொடுப்பதில்லை. அறிவியல் பூர்வமான ஒன்றை, நம்பிக்கை என்று மாற்றிவிட்டனர். இதனால் ஏற்பட்ட பெரிய இடைவெளியால் பஞ்சாங்க கணிப்பு பொய்த்துவிடுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்