search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children’s Day"

    • சிவகங்கை அருகே குழந்தைகள் தினவிழா பேச்சு போட்டி நடந்தது.
    • 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. 'பெண் குழந்தைகளை காப்போம்', பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல் பரிசு 5 பேரும், 2-ம் பரிசு 5 பேருக்கும், 3-ம் பரிசு 7 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 1-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் வகுப்பு ஆசிரியர் நீலகேசி பரிசுகள் வழங்கினார். அதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    • விருதுநகரில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகரில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் ெதாடங்கி வைத்தார்.

    பேரணியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்தல், குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்தல், அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அள விலான வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பெண் சிசு கொலை, பாலின பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

    இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் சதீஸ்குமார், துணை தொழிலாளர் ஆய்வாளர் சதாசிவம், மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கேசா டி மிர் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ஆண்டுதோறும் அக்டோபர் 11-ந்தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பி ரண்டு பிரீத்தி அறிவுறுத்துதலின்படி ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி துவங்கி வைத்தார். காந்தி சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இப்பேரணியில் பெண் குழந் தைகளின் முக்கியத்துவம், கல்வி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    பள்ளி தாளாளர் வைமா.திருப்பதி செல்வன் மற்றும் பள்ளி முதுநிலை முதல்வர் டி.அருணா தேவியின் வழி காட்டுதலின்படி நடைபெற்ற இப்பேரணி பள்ளி முதல்வர் அ.திருமலை ராஜன் விழா ஒருங்கிணைப்பாளர் ரா.ரேஷ்மா மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

    • அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
    • மாணவ, மாணவிகளின் கோலாட்டம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிப்பட்டி ஊராட்சி மக்கன்டான் கோவில்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியை ஈஸ்வரி தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில் மற்றும் சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கோலாட்டம், ராதா ருக்மணி ஆட்டம், தப்பாட்டம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பள்ளி மேலாண்மை குழு தலைவி சுபாஸ்ரீ, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவி ரஞ்சிதா, செல்வம், கோளம்பழனி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பரிமளா நன்றி கூறினார்.

    • மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது.
    • மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இதில் ஆசிரியர்கள்- மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வகுப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் மதியம் சிறப்பு விருந்தாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

    • இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 குறுவளமையங்களின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் தங்களது மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர். முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு ஓட்டு மொத்த அளவிலான போட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் முத்துலட்சுமி வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையும், போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பாளருக்கான சான்றிதழையும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் சபரிநாதன் வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வர்கள் சூர்யா, சிவரஞ்சனி, மகாலட்சுமி, சிவகாமி, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர். தன்னார்வலர் சாந்தினி நன்றி கூறினார்.

    ×