என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல்மூட்டைகள்"

    • ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் புதுமண்ணியாறு உள்ளது. ஓதவந்தான்குடி, செருகுடி,வட்டாரம்,மாதானம்,பழையபாளையம்,தாண்டவன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை பல்வேறு கிராமங்களுக்கு பாசனவசதி தரும் பிரதான பாசன ஆறாக உள்ளது.

    இதனிடையே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புதுமண்ணியாற்றில் கரைகள் வழிந்து தண்ணீர் செல்கிறது.

    இதனால் புதுமண்ணியாற்றில் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகளும் அவதியடைந்தனர்.

    இதனிடையே உடைப்பு ஏற்பட்ட கரைகளை பொதுமக்களே மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.

    இந்த புதுமண்ணியாற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது இவ்வாறு கரைகள் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும், இதனால் வரும் காலத்தில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க கான்கிரிட் தடுப்பு சுவர் அமைத்து கரைகளை பலப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×