search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவளை"

    • பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
    • புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அனைத்து மதங்களிலும் வித்தியாசமான வகையில் பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் நிகழ்வது வழக்கும். அந்த வகையில் இந்து மதத்தைப் பின் பற்றும் மக்கள் முக்கியமாக கிராமங்களில் உள்ள மக்கள் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று நம்புகின்றனர்.

    இது சுத்த மூடநம்பிக்கை என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் இன்றளவும் சில இடங்களில் இந்த சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்த சடங்கு வழக்கொழிந்தாலும், வட மாநில கிராமங்கள் இந்த சடங்கை கைவிடுவதாக இல்லை.

    அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

    மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
    • தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன.

    ஆந்திர மாநிலம், பலமனேறு அருகே உள்ள கவுண்டன்யா வனப்பகுதியை ஒட்டி கவுனிதிம்மேபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளத்தில் இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிய வகையை சேர்ந்த முதுகு தங்கம் போல் மின்னும் தவளையை கண்டு பிடித்தனர்.

    2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த தவளையின் முதுகு தங்க நிறத்திலும் உடல் மேல் பகுதி கருமையாகவும் உள்ளது. இதனுடைய அறிவியல் பெயர் ஹைரா கிராசிலிஸ் என்பதாகும்.

    இந்திய துணை கண்டத்தில் இதுவரை 19 வகையான தங்க முதுகு தவளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தவளைகளின் இருப்பு, இல்லாமை மற்றும் நமது சுற்றுப்புறங்களில் அவற்றின் நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் வாழிடங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பெற இந்த கணக்கெடுப்பு உதவும்.
    • தவளைகளுக்கு தோல் சுவாசம் உள்ளது. அதாவது அவை தோல் வழியாக சுவாசிக்கின்றன.

    சென்னை:

    பறவைகள் கணக்கெடுப்பு, புலி கணக்கெடுப்பு என வனத்துறையினரும், இயற்கை ஆர்வலர்களும் நடத்துவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

    தற்போது சென்னையை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் தவளை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் தவளைகளின் கூக்குரல்களை காது கொடுத்து கண்காணிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    சென்னையை தளமாக கொண்டு 44 வருடங்களாக செயல்பட்டு வரும் மெட்ராஸ் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் (எம்.என்.எஸ்.) இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.

    இதுகுறித்து எம்.என்.எஸ் கவுரவ செயலாளர் விஜய் குமார் கூறுகையில், தவளைகள் நீரியல் ஆரோக்கியம் மற்றும் வாழ்விடத் தரத்தின் அதிக உணர்திறன் கொண்ட உயிர் குறிகாட்டிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

    இவை வேட்டையாடப்படும் இரையாக இருப்பதால் அவை இல்லாதது முழு சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மாற்றும். தவளைகளின் இருப்பு, இல்லாமை மற்றும் நமது சுற்றுப்புறங்களில் அவற்றின் நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் வாழிடங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பெற இந்த கணக்கெடுப்பு உதவும் என்றார்.

    இந்த மாதமும், அடுத்த மாதமும் தவளைகளின் சத்தம் கேட்டால் அவற்றை படம் எடுத்து அனுப்புமாறும், பழைய தரவுகளை பதிவேற்றுவதை தவிர்க்குமாறு பங்களிப்பாளர்களை இந்த சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தவளைகளின் இருப்பு, இல்லாமை, அவைகளின் வாழ்விடங்கள் மற்றும் அவற்றை நன்றாக புரிந்து கொள்ள உதவும் பல்வேறு தகவல்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம் என குமார் கூறினார்.

    இயற்கை ஆர்வலர் யுவன் கூறுகையில், தவளைகளுக்கு தோல் சுவாசம் உள்ளது. அதாவது அவை தோல் வழியாக சுவாசிக்கின்றன. எனவே அவை அதிக உணர் திறன் கொண்டவை. ஒரு நீர்ப்பிடிப்பு பகுதியின் ஆரோக்கியம் அல்லது அப்பகுதியின் நீரியல் தவளைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம்.

    ஏனெனில் அவை உயிரியல் கண்காணிப்பாளர்கள். அவை பூச்சிக் கட்டுப்பாட்டாளர்களாகவும் செயல்படுகின்றன. ஒட்டுமொத்தமாக அவற்றின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. சில இனங்கள் முற்றிலும் அழிந்து விட்டது என்றார்.

    ×