என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கனி"

    • குரங்கணி வழியாக ஏரல் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • குழிகளில் மழைநீர் தேங்கி வாகனத்தில் செல்வோர் தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது.

    தென்திருப்பேரை:

    பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வருவது சாலை வசதி. இந்த சாலை வசதியால் பொதுமக்கள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து சென்று வருவதற்கு தரமான சாலை வசதி வேண்டும்.

    ஆனால் தென்திருப்பேரையில் இருந்து குரங்கணி வழியாக ஏரல் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டிலிருந்து இருந்து குரங்கணி வரையுள்ள ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இந்த சாலையில் பஸ் போக்குவரத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் செல்லும் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.

    தற்போது மழையின் காரணமாக பள்ளமான குழிகளில் மழைநீர் தேங்கி சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் வாகனத்தில் செல்வோர் தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இந்த சேதமடைந்த சாலையின் பள்ளத்திற்கு அருகில் நூலகத்திற்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றான மகரநெடுங்குழைக்காதர் கோவிலுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பஸ் மற்றும் வேன்களில் வந்து வழிபட்டு செல்கிறார். சாலை மோசமாக உள்ளதால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றார்கள்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×