என் மலர்
நீங்கள் தேடியது "ரேசன் அரிசி கடத்தி சென்ற"
- கே.என்.பாளையம் பகுதியில் இருந்து ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் இருந்து இன்று காலை 6 மணியளவில் ரேசன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் அரக்கன் கோட்டை அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 40 கிலோ எடையுள்ள 32 ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தது பவானி மேற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், பவானியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு ரேசன் அரிசி கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இதனையடுத்து ரேசன் அரிசி மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் மணிகண்டனை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவித்தனர்.