என் மலர்
நீங்கள் தேடியது "மது கடத்தியவர் கைது"
- ஆசனூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அப்பொழுது மைசூரில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பஸ்சில் ஒருவரின் பேக்கில் கர்நாடக மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தாளவாடி:
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கர்நாடக அரசு பஸ் மூலம் மது கடத்தப்படுவதாக தனி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆசனூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது ஒருவரின் பேக்கில் கர்நாடக மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக மதுவை பறிமுதல் செய்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சோமனூர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (49) என்பதும், 6 லிட்டர் கர்நாடகா மது பாட்டில், மற்றும் 50 மது பாக்ெகட்டையும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.