என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் தடம் புரண்டு விபத்து"
- பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
- 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து மீரஜ் நோக்கி இரும்புதாது ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயில் இன்று காலை புறப்பட்டது. இந்த ரெயில் பெலகாவி பகுதியில் தடம் புரண்டு விபத்தானது.
இதுப்பற்றி தெரியவந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி சுமார் 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் ரெயில் சேவை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக அந்த வழியாக வந்து கொண்டு இருந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
- பணிமனையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு சென்றபோது பெட்டிகள் தடம் புரண்டன.
- ரெயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென ரெயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.
இதனை அறிந்த ரெயில் ஓட்டுனர் உடனடியாக அந்த ரெயிலை நிறுத்தினார். அந்த பகுதிக்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டு மீண்டும் அந்த ரெயிலுடன் இணைக்கப்பட்டன.
இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் வந்தடைந்தது. பெட்டிகள் தடம் புரண்ட போது அதில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரெயில் எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக தகவல்.
- விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரெயில் நிலையம் அருகே ரெயில் தடம் புரண்டுள்ளது. ரெயில் விபத்து, தண்டவாளத்தை ஒட்டி இருந்த எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.