search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமைகள்"

    • கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா நடந்தது.
    • பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து உலக மனித உரிமை தின விழாவை கீழக்கரையில் நடத்தியது.

    மக்கள் நல பாதுகாப்புக் கழக தலைவர் தமீமுதீன் தலைமை தாங்கினார். சட்ட விழிப்புணர்வு இயக்க செயலாளர் தாஜுல் அமீன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ஷேக்இப்ராஹிம் சாதனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான முஹம்மது சாலிஹ் ஹுசைன், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, தனியார் நிறு வனத்தின் இணை நிறுவனர் அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம் ஆகி யோர் பேசினர். சட்டம் சம்பந்தமான பொது மக்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

    சட்ட விழிப்புணர்வு இயக்க பொருளாளர் ஜாபீர் சுலைமான் நன்றி கூறினார். மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தொகுத்து வழங்கினார். இதில் 100-க்கும் அதிகமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை நீதிபதி பேசினார்.
    • காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்துக்களில் பெண்கள் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

    பெண்கள் அவற்றினை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்க ளது உரிமைகளை தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் ஹேம மாலினி, துணை முதல்வர் விசாலாட்சி, கவிதா, உதவி பேராசிரியர் வீரமணி, வக்கீல் மணிமேகலை ஆகியோர் பேசினர். இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

    ×