search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசு கட்டுப்பாடு வாரியம்"

    • விவசாய கழிவுகளை எரிப்பது தற்போதைய காற்று மாசு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
    • நொய்டாவில் சமீப நாட்களாகக் காற்றில் நச்சுத்தன்மை கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கையை மீறி சென்றுள்ளது.

    விவசாய கழிவுகளை எரிப்பது தற்போதைய காற்று மாசு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பஞ்சாபில் விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் டெல்லிக்கு மிக அருகில் உள்ள உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் சமீப நாட்களாகக் காற்றில் நச்சுத்தன்மை கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் இந்த அளவு காற்று மாசு ஏற்படப் பாகிஸ்தான் தான் காரணம் என உ.பி. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பேசிய உ.பி. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல தலைவர் குப்தா, நொய்டா, காசியாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு ஏற்பட பாகிஸ்தானைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.

    பாகிஸ்தான் விவசாயிகள் கழிவுகளை எரிப்பதாலேயே இந்த அளவு மாசு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். உ.பி. பகுதிகளில் ஏற்படும் காற்று மாசுக்கு 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தான் மீது உ.பி.  அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. .

    • குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்தில் நல்லாற்றின் குறுக்கே 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. திருப்பூரில் ஏராளமான விதிமீறல் பட்டன், ஜிப் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர், மாநகர பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் நல்லாற்றில் கலக்கிறது.

    தொடர் மழையால் நல்லாற்றில் உள்ள சாயம், சாக்கடை கழிவுகள், நஞ்சராயன் குளத்தில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதையடுத்து குளத்தில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் வடக்கு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர். நல்லாற்றில் சாயக்கழிவுநீர் கலக்கிறதா,ஆற்றுநீரின் டி.டி.எஸ்., அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்காக 2 நாட்கள் தொடர் ஆய்வு நடத்தியுள்ளோம். டி.டி.எஸ்., அளவு 900 க்கு கீழ் சீராகவே உள்ளது. நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். குளத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நீர் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடமும், வாரிய உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றனர்.

    ×