என் மலர்
நீங்கள் தேடியது "வெளிமாநில லாட்டரி"
- 2 செல்போன்கள், ரூ.13ஆயிரம் பறிமுதல்
- கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகள் விற்பனை செய்து பணம் வசூலித்து வருவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முகமது அசாருதீன் (வயது 23) என்பதும், தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.