என் மலர்
நீங்கள் தேடியது "வெளியே சென்ற"
- பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.
- இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பெருந்துறை:
பெருந்துறை ஈரோடு ரோடு சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (30). இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நந்த குமாரின் அப்பா, அம்மா, மற்றும் தாத்தா பழனிச்சாமி (75) ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பழனிசாமியின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து பழனிச்சாமி கொரோனா சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டு வந்தார்.
இதனால் பழனிசாமி அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று தொடர்ந்து வீட்டில் இருந்து வருகிறார். இதனால் பழனிச் சாமி மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இநத நிலையில் பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மீண்டும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து நந்தகுமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பழனி ச்சாமியை தேடி வருகிறார்.
- சஞ்சய் குமார் தனது தங்கையிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
- அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரபா தேவி. இவர்களுக்கு சஞ்சய் குமார் (15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதில் சஞ்சய்குமார் கோபி நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்து விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கணவன்-மனைவி இருவரும் காலையில் வேலைக்கு சென்று இரவில் தான் வீட்டுக்கு வருவார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
வீட்டில் சஞ்சய்குமாரும், அவரது தங்கை மட்டும் இருந்தனர். பின்னர் மதியம் சஞ்சய் குமார் தனது தங்கையிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் வராததால் அவரது பெற்றோர் சஞ்சய்குமாரை உறவினர், நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் சஞ்சய்குமார் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை.
இதனையடுத்து பெற்றோர் தனது மகனை மீட்டுத் தரக்கோரி கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான அன்று சஞ்சய் குமார் வெள்ளையில் பிரவுன் கலர் கோடு போட்ட டி சர்ட், கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.