search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொல்லியல் ஆய்வாளர்கள்"

    • ஊரில் காடு, திரடு போன்ற இடங்களில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது.
    • அங்கு புதைந்திருந்த தொல் பொருட்கள் சிதைவடைந்த நிலையில் அந்த இடம் முழுக்க பரவி காணப்படுகிறது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே பொருநையின் வடகரையில் அமைந்துள்ளது கொங்க ராயக்குறிச்சி. இவ்வூரின் காடு, திரடு போன்ற இடங்களில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது.

    எனவே, கொங்க ராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

    தொல்லியல் களம்

    தற்போது திருச் செந்தூர் சாலை விரிவாக்க பணிக்காக கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்க முதற்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இதனால் ஊரில் உள்ள திரடுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த திரடானது ஊரின் கீழத்தெருவில் அமைந்து ள்ளது. சுமார் 50 அடி உயரம் கொண்ட இந்த திரட்டில் பழமையான திருவாளிப் பெருமாள் மற்றும் சுயம்பு பத்திரகாளி அம்மன் கோவில்கள் உள்ளது. ஒரு காலத்தில் இங்குதான் குடியிருப்புகளை அமைத்து மக்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சாலை பணிக்காக அப்பகுதியில் உள்ள வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பி விடுவதற்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு புதைந்திருந்த தொல் பொருட்கள் சிதைவடைந்த நிலையில் அந்த இடம் முழுக்க பரவி காணப்படுகிறது. மேலும், குவியல் குவியலாக எலும்புகளும் உள்ளது. இது மனிதனின் கால், குறுக்கு, முட்டெலும்பு போன்று உள்ளதால், சாலை அமைக்கும் முன்பு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் இது குறித்து நேற்று மாலை மலரில் செய்தி வெளியானது. இதனை அடுத்து ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு பணியில் இயக்குனராகவும் திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனராகவும் உள்ள அருண் ராஜ் உத்தரவின் பேரில், ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய ஆய்வு மாணவர் மணிகண்டன் இதனை நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்த தகவலை மத்திய தொழில்துறை அதிகாரிக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    ×