என் மலர்
நீங்கள் தேடியது "இந்திராகாந்தி"
- இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர்:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநகர நிர்வாகிகள் சீதாராமன், கரந்தை கண்ணன், ராஜு, செந்தில் சிவகுமார், மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் மணிவண்ணன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் பொன் நல்லதம்பி, மக்கள் நலப் பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜெயராமன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், மகிளா காங்கிரஸ் கலைச்செல்வி, சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது, செயல்வீரர் அருண் சுபாஷ், ரயில் வடிவேல், ஆசிரியர் முருகேசன், நாஞ்சி ராஜேந்திரன், ரவிக்குமார், அலுவலக நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.
- எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.
1975-ம் ஆண்டு இந்தியா வில் எமர்ஜென்சி எனும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்
பட்டது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
எமர்ஜென்சியை எதிர்த்து நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த துணிச்சல் மிக்க அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
எமர்ஜென்சியின் இருண்ட நாட்கள் நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. எமர்ஜென்சி நமது அரசியலமைப்பு சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது.
இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.
I pay homage to all those courageous people who resisted the Emergency and worked to strengthen our democratic spirit. The #DarkDaysOfEmergency remain an unforgettable period in our history, totally opposite to the values our Constitution celebrates.
— Narendra Modi (@narendramodi) June 25, 2023
- காந்தி’ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.
- 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
அமேதி பாராளுமன்றத் தொகுதி 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது தொடங்கி 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் வரை காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிடுவது வழக்கமாக இருந்தது.
அமேதியில் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஸ்மிருதி இரானி (மத்திய மந்திரி) 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார்.
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்ட ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.
இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதி பாராளுமன்றத் தொகுதியில் `காந்தி' குடும்பத்தை (ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி) சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998-ம் ஆண்டு அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்துக்கு மாற்றாக அவர்களின் சார்பில் சதீஷ் சர்மா நிறுத்தப்பட்டார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் சிங்கிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால் மீண்டும் 1999-ல் நடைபெற்ற தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் சிங்கை வீழ்த்தி சோனியா காந்தி வெற்றிபெற்றார்.
இந்த முறை காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தி வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முதல் அமேதி தொகுதியை ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுத்து விட்டு சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடத் தொடங்கினார். இந்நிலையில் 2004, 2009, 2014 என தொடர்ந்து மூன்றுமுறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி வாகை சூடி இறுதியாக 2019 தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் வீழ்ந்தார்.
காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் 1967-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வித்யா தர் பாஜ்பாய் வெற்றிபெற்று 1971 தேர்தலிலும் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.
1977 தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை வீழ்த்தி ஜனதா கட்சியைச் சேர்ந்த ரவீந்திர பிரதாப் சிங் வெற்றிபெற்றார். மீண்டும் 1980-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ரவீந்திர சிங்கை சஞ்சய் காந்தி தோற்கடித்தார்.
வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார். இதனால் அமேதி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி போட்டியிட்டு 84.18 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.
இதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை அமேதி தொகுதி எம்பியாக ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991-ம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அமேதி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு தேர்தலிலும் அமேதியில் இருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1998-ம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். அப்போது காங்கிரசுக்கு 31.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அமேதியில் அந்த கட்சி சந்தித்த மோசமான தோல்வி ஆகும்.
இதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு அமேதி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி 67.12 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் ரேபரேலி பாராளுமன்றத் தொகுதிக்கு மாறினார்.
அந்த ஆண்டில் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009, 2014-ம் ஆண்டு அதேதொகுதியில் இருந்து அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
இதுவரை 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 1977, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதியில் களமிறங்கி உள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் தேர்தல் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.