என் மலர்
நீங்கள் தேடியது "உணவுத்"
- தானியங்களின் முக்கியத்துவம் குறித்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
- 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு உணவு திருவிழாவில் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, எதிர்வரும் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து உள்ளது. இதையடுத்து தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும் பயன்பாட்டினை அதிக ரிக்கவும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் சந்திரசேகர் விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களை பார்த்து அதன் பயன்கள் பற்றி கேட்டறிந்தனர். மேலும் தங்களது அன்றாட வாழ்வில் சிறுதானியங்களை பயன்படுத்துவது என மாணவ, மாணவிகள் உறுதி எடுத்துக் கொண்டனர். விழாவில் அறிவியல் ஆசிரியர்கள் கார்த்திகேயன், பூங்கொடி, சத்துணவு அமைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாண விகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.