search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவம் முகாம்"

    • தவிட்டுப்பாளையம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம்
    • சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.


    • ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • மருத்துவ குழுவினர் 100-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் மதுரை குரு மருத்துவமனை, ராமநாதபுரம் வர்ஷா பல் மருத்துவமனை மற்றும் பனைக்குளம் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி இணைந்து குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தியது. கட்சியின் செயலாளர் அனஸ் தலைமை தாங்கினார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜெமிலுன்னிஸா முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் கல்பனா, ஜெமிலுன்னிஸா தலைமையில் மருத்துவ குழுவினர் 100-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் அப்துல் ஜமீல், மாவட்டச் செயலாளர் அபுல் கலாம் ஆசாத், நஜிமுதீன், மாவட்ட மீனவரணி தலைவர் பஹ்ருதீன், திருவாடானை தொகுதி தலைவர் முகமது ஹனீப், தொகுதி செயலாளர் நூர் முகமது, தொகுதி இணைச் செயலாளர் அஸ்லம், ஊராட்சி மன்ற உறுப்பினர் சித்தி நிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×