search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலித் பெண்"

    • ரூ.1500 கடன் தொகையை வட்டியுடன் முழுவதும் செலுத்தி விட்டார்
    • காவல் அதிகாரிகளின் விசாரணையால் ஆத்திரமடைந்தார் பிரமோத்

    பீகாரின் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ளது குஸ்ருபூர் நகரம். இங்குள்ள மோஷிம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு தலித் பெண்ணிற்கு பண நெருக்கடி ஏற்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு பண தட்டுப்பாட்டால் அதே ஊரில் வசிக்கும் பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1500 கடனாக பெற்றார். இதற்கான வட்டி தொகையுடன் கடனை முழுவதுமாக அவர் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால், பிரமோத் மற்றும் அவரது மகன் அன்சு சிங் இருவரும் அந்த தலித் பெண் மேலும் வட்டி செலுத்த வேண்டும் என கூறி வற்புறுத்தி வந்தனர். ஆனால், அப்பெண்மணி இதற்கு மறுத்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் பிரமோத் சிங் அப்பெண்ணை பணத்தை தரா விட்டால் நிர்வாணமாக்கி ஊரில் நடக்க விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து அப்பெண்மணி குஸ்ருபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் அதிகாரிகள் பிரமோத்தை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் பிரமோத் காவல் நிலையம் சென்றார்.

    இதில் ஆத்திரமடைந்த பிரமோத் அன்றிரவு தனது நண்பர்கள் சிலருடன் அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவரை கடத்தி, தனது வீட்டிற்கு பலவந்தமாக தூக்கி வந்தார். பிறகு அவரை தாக்கி, ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தினார். இதிலும் ஆத்திரம் தீராத பிரமோத், தனது மகனை அழைத்து அப்பெண்ணின் வாயில் சிறுநீர் கழிக்க வைத்தார்.

    அங்கிருந்து எப்படியோ தப்பித்த அப்பெண் தனது உறவினர்களிடன் நடந்ததை கூறினார். இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர்.

    அந்த பெண்மணியை உடனடியாக மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர்.

    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை தேடும் வேட்டை நடைபெறுவதாகவும் காவல்நிலைய அதிகாரி சியாராம் யாதவ் கூறினார்.

    • தண்ணீர் தொட்டி மாட்டு மூத்திரத்தால் சுத்தம் செய்யப்பட்டதாக தகவல்.
    • தலித் பெண்ணை அடையாளம் காண உள்ளூர் நிர்வாகம் முயற்சி.

    சாமராஜநகர்:

    கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை பயன்படுத்தி தண்ணீர் குடித்தார். இதை கண்ட அங்கிருந்த சிலர் அந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு மாட்டு மூத்திரத்தால் சுத்திகரித்ததாக கூறப்படுகிறது.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தண்ணீர் தொட்டி மாட்டு மூத்திரத்தால் சுத்தம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அந்த பகுதி வட்டாட்சியர் பஸ்வராஜ் கூறியுள்ளார்.

    தண்ணீர் தொட்டியில் அந்த பெண் தண்ணீர் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை, இதுவரை அவர் யார் என்பது தெரியவில்லை, நாங்கள் அவளை அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் கண்டு பிடிக்கப்பட்டவுடன் தீண்டாமை குறித்த வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதனிடையே அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் அனைவரும் தண்ணீர் குடிக்கலாம் என்று கிராம  ஊழியர்கள் எழுதி வைத்தனர்.  மேலும் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிராம மக்களை அங்குள்ள அனைத்து தொட்டிகளுக்கும் அழைத்துச் சென்ற உள்ளூர் அதிகாரிகள் சிலர் தண்ணீர் குடிக்க வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    ×